யாப்பு

 இடைக்காடு நம்பிக்கை நிதியம்

IDAIKKADU TRUST FUND (ITF)

யாப்பு விதிமுறைகள்

 • நிதியத்தின் பெயர்

   இந்தநிதியம் இடைக்காடு நம்பிக்கை நிதியம் என அழைக்கப்படும்.

 • நிதியத்தின் தொலைநோக்கு

              எமது கிராமம், எமது நாட்டின் முன்மாதிரியான கிராமமாகத் திகழ்தல்

 • நிதியத்தின் பணிக்கூற்று
  ஒன்றுபடுவோம்! உழைப்போம்! உயர்வோம்!
 • நிதியத்தின் சின்னம்
  பசுமை நிறைந்த எமது இடைக்காடு கிராமத்தின் ஒற்றுமை, கல்வி, விவசாயம், விளையாட்டு,தொழில்நுட்பம் போன்றவற்றைகுறித்துக் காட்டுவதாக அமைந்துள்ளது.
 • நிதியத்தின் கொள்கை விளக்கம்
  இடைக்காடு கிராமத்தில் வாழும் அனைத்து மக்களினதும் சமூக, பொருளாதார, கலாச்சார மேம்பாட்டினை இலக்காகக் கொண்டு கல்வி, சுகாதாரம், விவசாயம், தொழில்நுட்பம் போன்ற துறைகளில் அபிவிருத்தியை ஏற்படுத்துதற்கு ஊக்குவித்தலும் உதவிசெய்தலும்.
 • நிதியத்தின் நிரந்தர அலுவலகம்
  நிதியத்தின் நிரந்தர அலுவலகம் நிர்வாக சபை தீர்மானித்த இடத்தில் செயற்படும். தற்சமயம் இடைக்காடு மாணிக்க இடைக்காடர் சனசமூக நிலையத்தில் இயங்கும்.
 • நிதியத்தின் செயற்பாடுகள்
  • இடைக்காட்டு கிராமத்தில் வாழும் அனைத்து மக்களது வாழ்வாதார மேம்பாட்டிற்கு தேவையான கல்வி, சுகாதாரம், தொழில்நுட்டபம், விவசாயம், சூழலியல், உடல் உளவிருத்தி, தொழில் வாய்ப்புக்கள் போன்றவற்றிற்கு உதவுதல்.
  • “இடைக்காடு” கிராமம் பற்றிய வரலாற்றினை ஆவணப்படுத்தல் மற்றும் பேணிப்பாதுகாத்தல்.
  • நிதியத்தின் செயற்பாடுகளுக்கு தேவைப்படும் முக்கிய பொதுமையங்களை இனங்கண்டு பெற்றுக்கொள்ளல்.
  • நிதியத்திற்கு தேவை ஏற்படின் இடைக்காடு கிராமத்திலுள்ள ஏனைய அமைப்புக்களுடன் சேர்ந்து இயங்குதல்.
  • நிதியத்தின் செயற்றிட்டங்களிற்கு நிர்வாகசபையினால் விசேட உபகுழுக்களை அமைத்தல்.
 • அங்கத்துவம்
  உறுப்பினர்தகைமை:
 • இடைக்காடு கிராமத்தை பூர்வீகமாக கொண்டவர் அல்லது இக் கிராம பூர்வீக குடும்பத்தில் வாழ்க்கைப்பட்டவராக இருத்தல் வேண்டும்.
 • 18 வயதை பூர்த்தி செய்தவராக இருத்தல் வேண்டும்.
 • இக் கிராமத்தை பூர்வீகமாக கொண்டிராத ஒருவர் இந் நிதியத்தின் கொள்கையிலும் கிராம அபிவிருத்தியிலும் ஈடுபாடு கொண்டவராகவும் இவரை அங்கத்தவராக இணைப்பதால் கிராம அபிவிருத்திக்கு பயனுண்டாகும் என நிர்வாகசபை கருதினால் பொதுச்சபையின் அங்கீகாரத்துடன் அவ்வாறான ஒருவரை கௌரவ உறுப்பினராக சேர்த்துக்கொள்ள முடியும்.
 • அங்கத்துவ கட்டணம்
  இவ் நிதியத்தின் அங்கத்துவம் பெற எவ்வித அங்கத்துவ கட்டணமும் அறவிடப்படமாட்டாது. தேவை ஏற்படின் எதிர்காலத்தில் நிர்வாகசபை அங்கத்துவ கட்டணத்தை நிர்ணயம் செய்யமுடியும்.
 • நிர்வாக சபை
  இவ் நிதியத்தின் நிர்வாக சபை கீழ்காணும் உத்தியோகத்தர்களைக் கொண்டதாகும்.
 • தலைவர்
 • உப தலைவர்
 • செயலாளர்
 • உப செயலாளர்
 • பொருளாளர்
 • செயற்குழு உறுப்பினர்கள் அறுவர் (மொத்தம் 11பேர்)
 • ஆலோசகர்கள்
  நிதியத்தின் ஆலோசரர்களாக மூவர் பொதுச்சபையினால் தெரிவுசெய்யப்படுவர்.
 • நிர்வாகசபை உறுப்பினர்கள் தெரிவு
  நிர்வாக சபை உறுப்பினர்கள் நிதியத்தின் பொதுச்சபைக் கூட்டத்தில் உறுப்பினர்களின் முன்மொழிதல், வழிமொழிதல் மூலம் தெரிவு செய்யப்படுவர்.ஒரே பதவிக்கு ஒன்றுக்கு மேற்பட்ட முன்மொழிதல்கள் காணப்படும் சந்தர்ப்பத்தில் பொதுச்சபையில் வாக்களிப்பின் மூலம் தெரிவு மேற்கொள்ளப்படும். வாக்களிப்பதற்கு அங்கத்தவர்கள் மட்டும் தகுதியுடையவராவர்.நிர்வாகசபையில் வெற்றிடம் ஒன்று ஏற்படும் சந்தர்ப்பத்தில் அவ்வெற்றிடத்தை நிர்வாகசபை, அங்கத்துவப்பட்டியலிருந்து உறுப்பினர் ஒருவரை தற்காலிகமாக நியமிக்கும். ஆயினும் அந்நியமனம் அடுத்துவரும் பொதுக்கூட்டத்தில் உறுதிப்படுத்தப்பட வேண்டும்.
 • நிர்வாகசபை உறுப்பினர்களின் பதவிக்காலம்
  நிர்வாகசபை உறுப்பினர்களின் பதவிக்காலம் மூன்று ஆண்டுகாலமாகும்.
 • நிர்வாகசபைக் கூட்டம்
  நிர்வாகசபைக் கூட்டம் மூன்றுமாதங்களுக்கொருமுறை கூட்டப்படவேண்டியதுடன் தலைவர் அல்லதுசெயலாளர் உட்பட ஏழு நிர்வாகசபை உறுப்பினர்கள் கட்டாயமாக சமூகமளித்திருக்கவேண்டும். தேவையேற்படின் அவசர நிர்வாகசபை கூட்டங்களையும் கூட்டலாம்.
 • வருடாந்த பொதுச்சபைக்கூட்டம்
  நிதியத்தின் வருடாந்த பொதுச்சபைக் கூட்டம் நிதி ஆண்டு (ஜனவரி 01ம் திகதிமுதல் டிசம்பர் 31 திகதி வரையிலான காலம்); முடிவுற்றதன் பின்னர் முடிந்த நிதியாண்டிற்கான கணக்காய்வு செய்யப்பட்ட கணக்கறிக்கைகளுடன் இயன்றவரை விரைவில், அதாவது ஏப்பிரல் மாதம் 30ஆம் திகதிக்கு முன்னர் நடத்தப்பட வேண்டும். பொதுச்சபைக்கூட்டம் நடைபெறுவதற்கு குறைந்தது 03 வாரங்களுக்கு முன்னர் செயலாளரினால் அனைத்து உறுப்பினர்களுக்கும் அறிவித்தல் விடுக்க வேண்டும். தேவையேற்படின் அவசர பொதுச்சபை கூட்டங்களையும் கூட்டலாம்.
 • பொதுச்சபையின் அதிகாரங்கள்
  1. நிதியத்தின் மேம்பாட்டிற்கு தேவையானதென கருதப்படும் சட்ட திட்டங்களை உருவாக்குதல், தேவை ஏற்படும் போது மாற்றங்களை மேற்கொள்ளுதல்.
  2. நிதியத்திற்கு நிர்வாகசபை உறுப்பினர்களை தெரிவுசெய்தல்.
  3. நிதியத்தின் மேம்பாட்டிற்கு உகந்ததென கருதப்படும் ஏனைய தேவையான விடயங்களை முன்மொழிந்து ஏற்றுக்கொள்ளல்
 • கணப10ரணம்
  குறைந்தது ஐம்பது (50) உறுப்பினர்கள்.
 • அறிக்கை
  அனைத்து கூட்ட அறிக்கைகளும் அறிக்கைப் புத்தகத்தில் பதியப்படவேண்டும். கூட்ட அறிக்கை அடுத்த கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்டு அங்கீகரிக்கப்படுதல் வேண்டும்.
 • நிதி
  நிதிச் செயற்பாடுகள் அனைத்தும் நிர்வாகசபையால் தீர்மானிக்கப்பட்ட வங்கிக் கணக்கினூடாகவே மேற்கொள்ளப்பட வேண்டும். வங்கி நடவடிக்கைகளை பொருளாளருடன் தலைவர் அல்லது செயலாளர் இணைந்து மேற்கொள்ள வேண்டும். ரூபா.100,000.00 அல்லது அதற்கு மேற்பட்ட மீளப்பெறுகை ஒவ்வொன்றும் நிர்வாகசபையினால் அனுமதிக்கப்படவேண்டும்.நிதியத்தின் அன்பளிப்பாக கிடைக்கப்பெறும் அனைத்து நிதியும் உரிய பதிவேடுகளில் பொருளாளரினால் பதியப்பட்டு வங்கியில் நிதியத்தின் கணக்கில் வைப்பிலிட வேண்டும்.நிதியத்தின் செயற்பாடுகளுக்குத் தேவையான நிதியினை தாமாகவே முன்வந்து விருப்பத்துடன் அன்பளிப்பு செய்ய விரும்பும் கொடையாளிகளிடமிருந்தும் அவசியமேற்படும் பட்சத்தில் அரச, தனியார் அமைப்புகளிலிருந்தும் நிதியைப் பெற்றுக் கொள்ளலாம். கிடைக்கப்பெறும் ஒவ்வொரு அன்பளிப்பிற்கும் அச்சிடப்பட்ட பற்றுச்சீட்டு பொருளாளரினால் வழக்கப்பட வேண்டும். நிதியம் வருவாயை ஈட்டித்தரக்கூடிய முதலீடுகளை செய்து அவற்றிலிருந்து வருவாயை பெற்றுக்கொள்ள முடியும்.
 • சொத்துக்கள்
  சொத்து நடவடிக்கைகளை பொருளாளருடன் தலைவர் அல்லது செயலாளர் இணைந்து நிர்வாகசபையின் அனுமதியுடன் மேற்கொள்ள வேண்டும். நிதியத்தினால் கொள்வனவு செய்யப்படும் சொத்துக்கள் யாவும் பொருட்பதிவேட்டில் பொருளாளரினால் பதியப்பட்டு தொடர்ச்சியாக பேணப்பட வேண்டும்.
 • நிதியத்திற்கு என ஒரு நிரந்தர இணையத்தளம் ஒன்றினை ஆரம்பித்தல் வேண்டும்.
 • நிர்வாகசபையின் பொறுப்புக்களும் அதிகாரங்களும்
  • தலைவர்
   பொதுச்சபை மற்றும் நிர்வாகசபைக் கூட்டங்களுக்கு தலைமைதாங்குதல், பொருளாளருடன் இணைந்து வங்கி நடவடிக்கைகளை மேற்கொள்ளல், செயலாளர் நிர்வாகசபை, பொதுக் கூட்டத்தினை நடாத்துவதற்கு ஏற்பாடு செய்யாவிடத்து அவற்றினை நடாத்துவதற்கு ஏற்பாடுசெய்தல் மற்றும் நிர்வாகசபையை வழிநடத்துதல்.
  • செயலாளர்
   பொதுச்சபை மற்றும் நிர்வாகசபைக் கூட்டங்களை நடாத்துவதற்கு ஏற்பாடுசெய்தல், நிர்வாகசபை மற்றும் பொதுக் கூட்ட அறிக்கை தயாரித்தல், நிர்வாகசபை தீர்மானங்களை நிறைவேற்றுவதற்கு நடவடிக்கை எடுத்தல், பொருளாளருடன் சேர்ந்து வங்கி நடவடிக்கைகளை மேற்கொள்ளல்
  • பொருளாளர்
   அனைத்து நிதிசார் நடவடிக்கைகளுக்கும் பொறுப்புக் கூறக் கடமைப்பட்டவர், நிதிக் கணக்குகளை பேணுதல், வங்கி நடவடிக்கைகளை தலைவர் அல்லது செயலாளருடன் இணைந்து மேற்கொள்ளல் மற்றும் வருடாந்த கணக்கறிக்கை தயாரித்தல். சில்லறைச் செலவுகளுக்கென 10இ000ஃஸ்ரீ ரூபாவினை பணமாக வைத்திருந்து செலவு செய்ய அதிகாரம் உண்டு. இதற்குரிய தனியான கணக்கேடு ஒன்றினை பேணவேண்டும். ஒரு தடவையில் பெற்றபணம் முடிவடைந்தவுடன் அதற்குறிய கணக்கறிக்கையை செயற்குழுவில் சமர்ப்பித்து திரும்ப நிதியினை பெறமுடியும்.
  • நிர்வாகசபை உறுப்பினர்கள்
   நிர்வாகசபை தீர்மானங்களை நிறைவேற்றுவதற்கு உதவுதல். நிர்வாகசபை உறுப்பினர் பதவியிலிருந்து விலகிக் கொள்ள விரும்பினால் அதற்கான விளக்கத்துடன் எழுத்து மூலமான விண்ணப்பத்தை செயலாளரிடம் தான் விலகிக் கொள்ள விரும்பும் திகதிக்கு 30 நாட்களுக்கு முன்னர் ஒப்படைக்க வேண்டும்.
 • கணக்காய்வு
  நிதியத்தின் கணக்குகள் யாவும் வருட இறுதியில் முடிவுறுத்தப்பட்டு, நிதியத்தினால் தெரிவுசெய்யப்பட்ட கணக்காய்வாளரினால் பரிசீலிக்கப்பட்டு வருடாந்த பொதுக்கூட்டத்தில் ஆராயப்படவேண்டும். பொதுக்கூட்டம் நடைபெறும் தினத்திற்கு பதினைந்து நாட்கள் முன்பதாக வருடாந்த கணக்கறிக்கை உறுப்பினர்களுக்கு வழங்கப்பட வேண்டும் அல்லது இடைக்காடு மாணிக்க இடைக்காடர் சனசமூகநிலையத்திலும் இடைக்காடு கலைமகள் சமூகநிலையத்திலும் வருடாந்த கணக்கறிக்கை மக்கள் பார்வைக்கு வைக்கப்படல் வேண்டும்.
 • நிதியத்தின் ஆயுட்காலம்
  நிதியத்தின் ஆயுட்காலமானது இடைக்காடு வாழ் மக்கள் பூமியில் வாழும் காலமாகும். நிதியத்தின் செயற்பாடுகள் அனைத்தும் முற்றாக நிறுத்தப்படும் பட்சத்தில், நிதியத்தின் அசையும் அசையா சொத்துக்கள் அனைத்தும் அச்சந்தர்ப்பத்தில் இயங்கு நிலையில் இருக்கும் பின்வரும் பொது அமைப்புகளிற்கு சமமாக பகிரப்படல் வேண்டும்.
 • இடைக்காடு மாணிக்க இடைக்காடர் சனசமூகநிலையம்
 • இடைக்காடு கலைமகள் சனசமூகநிலையம்
 • யாப்புதிருத்தங்கள்
  நிதியத்தின் யாப்பில் ஏதும் திருத்தங்கள், மேலதிகமாக சேர்த்துக் கொள்ளல் ஏதுமிருப்பின் அதுவிடயமாக எழுத்து மூலமாக உறுப்பினர்கள் சமர்ப்பிக்க வேண்டியதுடன், அது நிர்வாகசபையில் பரிசீலிக்கப்பட்டு பொதுச்சபையினால் அங்கீகரிக்கப்படல் வேண்டும்.குறிப்பு : இங்கு யாப்பில் நிதியம் என குறிப்பிடப்படுவது ‘இடைக்காடு நம்பிக்கை நிதியம்’ என்பதையே குறிக்கும்