சிரேஷ்ட பிரiஐகளிற்கான ஒன்றுகூடல் குழுப்படங்கள்
சிரேஷ்ட பிரைனஐகளிற்கான ஒன்றுகூடல்
ஒன்றுகூடல்
இடைக்காடு நம்பிக்கை நிதியம்
29.08.2020
பொதுக்கூட்டம்
காலம் : 02.02.2019 சனிக்கிழமை
நேரம் : மாலை 7.00 மணி
இடம் : இடைக்காடு மாணிக்க இடைக்காடர் சனசமூக நிலையம்
நிகழ்சி நிரல்
• தலமையுரை
• செயற்பாட்டு அறிக்கை
• நிதி அறிக்கை
• கருத்துப்பகிர்வு
• புதிய செயற்குழு தெரிவு
அனைவரையும் இதில் கலந்துகொள்ளுமாறு அன்போடு அழைக்கிறோம்.
இடைக்காடு நம்பிக்கை நிதியம்
மர நடுகை
எமது ஊரின் வடக்குப்பக்கமாக மாணிக்க இடைக்காடர் வீதியின் இருபக்கமும், எமது நிதியத்தினால் மருது, இலுப்பை, மலைவேம்பு, கொன்றை, நாவல் போன்ற மரங்கள் நாட்டப்பட்டுள்ளது. மேற்படி செயற்றிட்டத்திற்கு பின்வரும் நடவடிக்கைகள் கட்டம் கட்டமாக செய்யப்பட்டது.
-
- வெட்டுக்குளத்தில் இருந்து அகழ்ந்தெடுக்கப்பட்ட மண் சம இடைவெளியில் பறிக்கப்பட்டது.
-
- அருகில் இருந்த மண் மற்றும் புற்கள் பறிக்கப்பட்ட மண்ணின் மேல் பரவப்பட்டது.
-
- பரல்கள் பாதியாக வெட்டப்பட்டு, கால்நடைகளிலிருந்து மரக்கன்றுகளை பாதுகாக்கும் பொருட்டு பரலின் மூடிப்பகுதி வெட்டி அமைக்கப்பட்டது.
-
- பரல்கள் செம்மண்ணினால் நிரப்பப்பட்டது.
- அரச திணைக்களம் ஒன்றிலிருந்து மரக்கன்றுகள் பெறப்பட்டது.
மேற்படி செயற்றிட்டத்தினை செவ்வனவே நடைமுறைப்படுத்திக் கொண்டிருக்கும் குறிப்பிடப்பட்ட ஈரிரபது வயதுடைய குழுவிற்கு நிதியத்தின் சார்பில் நன்றியை தெரிவித்துக்கொள்கின்றோம். மேலும் இச்செயற்றிட்டம் வெற்றிபெற எமதூர் மக்கள் அனைவரது ஒத்துழைப்பையும் அன்பாக கேட்டுக்கொள்கின்றோம்.
இடைக்காடு நம்பிக்கை நிதியம்
16.11.2017
வெட்டுக்குளம்
ஊர் மக்களின் கால்நடைகளுக்கான குடிநீர் தேவைக்கான கோரிக்கைக்கு அமைவாக ஊரின் வடக்கே அமைந்த வெட்டுக்குளம் 30.09.2017 அன்று அகழப்பட்டுள்ளது. அகழப்பட்ட மண் மாணிக்க இடைக்காடர் வீதியின் வடக்கு பக்கமாக இருபுறமும் மரநடுகை திட்டத்திற்காக எமது நிதியத்தினால் பறிக்கப்பட்டுள்ளது. மேற்படி செயற்றிட்டத்திற்கு உதவிய அனைவருக்கும் எமது நிதியம் சார்பாக நன்றியை தெரிவித்துக்கொள்கின்றோம்.








செயலாளர்
30.09.2017
மாக்கன் தோட்டம் ஊடான புவனேஸ்வரி அம்மன் கோவிலுக்கான பாதை – இருபக்க சீமெந்து கட்டு
இடைக்காடு நம்பிக்கை நிதியம்
29.08.2017
கால்நடைக்கான குடிநீர் தொட்டி – இயற்கை கிணறு
இடைக்காடு நம்பிக்கை நிதியம்
29.08.2017
கருத்தரங்கு
விடயம் : எமது கிராமத்திலுள்ள நிலத்தடி நீர் பரிசோதனை முடிவுகளும் அதன் தாக்கங்கள் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்ககைகளும்
மேற்படி விடயம் தொடர்பான கருத்தரங்கு மாணிக்க இடைக்காடர் சனசமூக நிலையத்தில் 12.08.2017 (சனிக்கிழமை) இரவு 8.00 மணியளவில் பொறியியலாளர் செ.சாரங்கன் (நெடுநாள் சிறுநீரக நோய் தடுப்பு பிரிவு, பிராந்திய சேவை மத்தியஸ்தானம் (வடக்கு), தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை) அவர்களினால் காட்சிப்படுத்தல் மற்றும் வாய்மொழி விளக்கங்களுடன் அனைத்து பணனாளிகளிற்கும் இலகுவில் விளங்கத்தக்க வகையில்; சிறப்பாக நடைபெற்றறது. இங்கருத்தரங்கினை சிறப்பாக நடாத்திய பொறியியலாளர் செ.சாரங்கன் அவர்களிற்கு எமது நிதியத்தின் சார்பில் நன்றியை தெரிவித்துக்கொள்கின்றோம்.
இக்கருத்தரங்கின் வாயிலாக, எமது கிராமத்திலிருந்து சேகரிக்கப்பட்ட 130 நீர் மாதிரிகளிலுள்ள நைத்திரேற்றின் அளவு, SLS-2013 இன் பிரகாரம் அனுமதிக்கபட்ட நிலையில் (50 mg/l) இருப்பினும் நைத்திரேற்றின் அளவு பூச்சிய நிலையில் இருப்பது சாலச்சிறந்தது. மேலும் 2% மான மாதிரிகள் அனுமதிக்கபட்ட நிலைக்கு அண்மையான முடிவுகளை தந்திருக்கின்றது (40 தொடக்கம் 50 வரை).
கருந்தரங்கில் தெரிவிக்கப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை நாம் அனைவரும் பின்பற்றுவோமாக இருந்தால், எமது எதிர்கால சந்ததியினர் ஆரோக்கியமாகவும் மகிழ்ச்சியுடனும் வாழ்வது திண்ணம்.
இடைக்காடு நம்பிக்கை நிதியம்
14.08.2017
கருத்தரங்கு
எமது கிராமத்திலுள்ள 130 நீர் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, நீரிலுள்ள நைத்திரேற்றின் அளவுகள் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை மூலம் எமது நிதியத்தினால் பரிசோதிக்கப்பட்டுள்ளன. எமது நிதியத்தின் 10.07.2017 திகதிய நிர்வாகசபை கூட்ட தீர்மானத்தின் பிரகாரம், மேற்படி விடயம் தொடர்பான கருத்தரங்கு ஒன்றினை 12.08.2017 திகதி நடாத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
விடயம் : எமது கிராமத்திலுள்ள நிலத்தடி நீர் பரிசோதனை முடிவுகளும் அதன் தாக்கங்கள் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்ககைகளும்
காலம் : 12.08.2017 (சனிக்கிழமை) இரவு 7.30 மணி
இடம் : மாணிக்க இடைக்காடர் சனசமூக நிலையம்
வளவாளர் : பொறியியலாளர் செ.சாரங்கன் நெடுநாள் சிறுநீரக நோய் தடுப்பு பிரிவு, பிராந்திய சேவை மத்தியஸ்தானம்; (வடக்கு), தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை.
அனைவரும் இக்கருத்தரங்கில் கலந்துகொண்டு பயன்பெறுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.
இடைக்காடு நம்பிக்கை நிதியம்
09.08.2017
நிலத்தடி நீர் பரிசோதனை
எமது கிராமத்திலுள்ள 77 நீர் மாதிரிகள் நான்கு கட்டங்களாக, எமது நிதியத்தினால் சேகரிக்கப்பட்டு நீரிலுள்ள நைத்திரேற்றுகளின் முடிவுகள் பெறப்பட்டுள்ளன.
கிராமத்திலுள்ள பலரின் வேண்டுகோளிற்கமைய மீண்டும் 02.08.2017 திகதி (புதன்கிழமை) நீர் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்புவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளோம் (இறுதிப்பரிசோதனை). எனவே பரிசோதனை செய்ய விரும்பியவர்கள் 31.07.2017 (திங்கட்கிழமை) இற்கு முன்னர் தமது பதிவுகளை நிர்வாக சபை உறுப்பினர்களிடம் மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
இடைக்காடு நம்பிக்கை நிதியம்
28.07.2017
நிதி அன்பளிப்பு
இடைக்காடு நம்பிக்கை நிதியத்தின் செயற்பாடுகளிற்காக எமது ஊர் புலம்பெயர் குடும்பங்களை சேர்ந்த ஒன்பது நலன்விரும்பிகள் தலா 1000 Canadian dollar நிதியினை வைகாசி மற்றும் ஆனி மாதங்களில் எமது நிதியத்திற்கு அன்பளிப்பாக வழங்கியுள்ளனர்.
மேற்படி ரூபா.1,027,948/= (ரூபா. பத்து இலட்சத்து இருபத்தியேளாயிரத்து தொளாயிரத்து நாற்பத்தியெட்டு) நிதியினை எமது நிதியத்திற்கு அன்பளிப்பாக வழங்கிய புலம்பெயர் நலன்விரும்பிகள் அனைவருக்கும் எமது நிதியத்தின் சார்பாக நன்றியினை தெரிவித்துக்கொள்கின்றோம்.
இடைக்காடு நம்பிக்கை நிதியம்
17.07.2017
நிலத்தடி நீர் பரிசோதனை
எமது கிராமத்திலுள்ள 77 நீர் மாதிரிகள் நான்கு கட்டங்களாக சேகரிக்கப்பட்டு, தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் மூலம் மாதிரிகளிலுள்ள நைத்திரேற்றுக்களின் அளவுகள் பெறப்பட்டுள்ளன.
செயலாளர்
28.06.2017
வருடாந்த பொதுக்கூட்டம்
இடைக்காடு நம்பிக்கை நிதியத்தின் வருடாந்த பொதுக்கூட்டம் 14.05.2017 ஆம் திகதி இரவு 8.00 மணியளவில் இடைக்காடு மாணிக்க இடைக்காடர் சனசமூக நிலையத்தில் தலைவர் வே.அரசகேசரி தலைமையில் நடைபெற்றது.
நிதியத்தின் செயற்பாட்டு அறிக்கை செயலாளரினாலும், நிதி அறிக்கை பொருளாளரினாலும், சமர்பிக்கப்பட்டு பொதுச்சபையினால் அங்கீகரிக்கப்பட்டது. மேலும் நிதியத்தின் நடைமுறையிலுள்ள செயற்றிட்டங்கள் மற்றும் புதிய செயற்றிட்டங்கள் பற்றி விரிவாக ஆராயப்பட்டு, முக்கிய சில செயற்றிட்டங்களை நடைமுறைப்படுத்துவதென தீர்மானிக்கப்பட்டது.
இடைக்காடு நம்பிக்கை நிதியம்
25.05.2017